;
Athirady Tamil News

சவுதி அரேபியாவில் இருந்து கேரள தம்பதி கொண்டு வந்த பூனை திருப்பி அனுப்பப்பட்டது..!!

0

கேரள மாநிலம் காயங்குளத்தைச் சேர்ந்த தம்பதி சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் தங்கி பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்த தம்பதி கடந்த 2-ந்தேதி ஜெட்டாவில் இருந்து சவுதி ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கொச்சியில் உள்ள நெடும்பாச்சேரி விமான நிலையம் வந்தனர். அவர்களின் உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது அவர்களின் பொருட்கள் இருந்த பையில் ஒரு பூனைக்குட்டி இருப்பதை கண்டனர். திடுக்கிட்ட அதிகாரிகள், பூனையை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான ஆவணங்கள் இருக்கிறதா? என்று கேட்டனர்.

ஆனால் தம்பதிகளிடம் பூனையை கொண்டு வருவதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து பூனையை தம்பதியுடன் அனுப்ப அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

மேலும் பூனையை கைப்பற்றி சுங்க அலுவலகத்தில் வைத்தனர். இதுபற்றி சுங்க அதிகாரிகள் கூறியதாவது:-

வெளிநாட்டில் இருந்து செல்ல பிராணிகள் கொண்டு வருவதாக இருந்தால் இந்தியாவில் உள்ள டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு மற்றும் ஐதராபாத் விமான நிலையங்கள் வழியாகத்தான் கொண்டு வரவேண்டும்.

இங்குதான் பிராணிகளை சோதனை செய்யும் அறைகளும், அதிகாரிகளும் உள்ளனர். மேலும் வெளிநாட்டில் இருந்து பிராணிகளை இங்கு கொண்டு வர உரிய ஆவணங்களும் இருக்க வேண்டும். ஆனால் காயங்குளம் தம்பதியிடம் ஆவணங்கள் இல்லை.

அதோடு பூனையை கொச்சி வழியாக கொண்டு வந்ததும் தவறு. எனவே அதை திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்யப்படும். பூனையை அழைத்து வந்ததற்காக அபராதமும் விதிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதையடுத்து காயங்குளம் தம்பதி கேரளாவில் இருந்து சவுதி அரேபியா சென்ற தங்களின் நண்பர் குடும்பத்தினர் மூலம் அந்த பூனையை மீண்டும் சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தனர்.

நேற்று அந்த பூனை கொச்சியில் இருந்து மீண்டும் சவுதி அரேபியாவிற்கு புறப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − 10 =

*