;
Athirady Tamil News

பனை மரத்தில் இருந்து விழுந்த குடும்பஸ்தர் பரிதாப மரணம் -பண்டத்தரிப்பில் சம்பவம்…!!

0

பனை மரத்தில் இருந்து விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் இரண்டரை மாதங்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம்(03-03-2018) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

பண்டத்தரிப்பு சாந்தையை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான துரைச்சாமி ஶ்ரீகாண்டீபன் (வயது 38) என்பவரே மேற்படி உயிரிழந்தவராவார்.

குறித்த நபர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி பனை மரத்தில் ஓலை வெட்டுவதற்காக ஏறியுள்ளார். தவறுதலாக கீழே விழுந்த இவர் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்திருந்தார்.

உடனடியாக சங்கானை வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கோமா நிலையில் இருந்த இவர் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.

இந்த மரண விசாரணையை யாழ் போதனா வைத்திய சாலை மரணவிசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டிருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 3 =

*