;
Athirady Tamil News

அனந்தியின் அறிவிப்பால் ஈ.பி.டி.பி மகிழ்ச்சி…!!

0

வடக்கு மாகாண சபைக்­கான தேர்­தல் காலத்­தில் தன்­மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­தலை தமிழ் அர­சுக் கட்­சி­யி­னரே முன்­னெ­டுத்­த­னர் என்று வடக்கு மாகாண சபை­யின் அமைச்­சர் திரு­மதி அனந்தி சசி­த­ரன் தெரி­வித்­தி­ ருப்­பது வர­வேற்­கத்­தக்­கது.

அந்­தத் தாக்­கு­தலை ஈ.பி.டி.பியி­ன­ரும் ஆயு­தம் தாங்­கிய இரா­ணு­வத்­தி­ன­ருமே நடத்­தி­னர் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர் அன்று எம்­மீது குற்­றம் சுமத்­தி­ய­து­டன், சில தமிழ் ஊட­கங்­க­ளும் அவ்­வாறே செய்­தி­யும் வெளி­யிட்­டி­ருந்­தன.

அந்­தக் குற்­றச்­சாட்­டுத் தொடர்­பில் இன்று உண்மை வெளி­யா­கி­யுள்­ளது. ஈ.பி.டி.பி. மீது அன்று சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டும் உண்­மைக்­குப் புறம்­பா­னது என்­பது உறு­தி­செய்­யப்­பட்டு அந்த அவ­தூ­றி­லி­ருந்­தும் ஈ.பி.டி.பியை வர­லாறு விடு­தலை செய்­துள்­ளது.

இவ்­வாறு அந்­தக் கட்சி வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அந்த ஊடக அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,திரு­மதி அனந்தி சசி­த­ரன் வீட்­டின் மீது மர்ம நபர்­க­ளால் மாகா­ண­ச­பைத் தேர்­த­லுக்கு முதல் நாள் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டது.

அந்­தத் தாக்­கு­தலை ஈ.பி.டி.பியி­னரே மேற்­கொண்­ட­னர் என்று தமிழ் அர­சுக் கட்­சி­யி­னர் பொய்­யான பரப்­பு­ரை­களை மேற்­கொண்டு வந்­த­னர்.

அந்த அவ­தூ­றுச் செய்­தி­யா­னது எமது வெற்­றி­யை­யும் பாதிக்­கச் செய்­தது. மேற்­படி சம்­ப­வம் தொடர்­பாக தமிழ்க் காங்­கி­ரஸ் கட்­சி­யின் பிர­மு­க­ரும் தற்­போ­தைய அந்­தக் கட்­சி­யின் பேச்­சா­ள­ரு­மான சட்­டத்­த­ரணி சுகாஸ் ஈ.பி.டி.பி மீது அபாண்­ட­மான குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்தி அவ­தூ­று­களை பரப்பி வந்­தி­ருந்­தார்.

2013ஆண்­டுக்­கான இலங்கை தொடர்­பான அறிக்­கை­யில் அந்­தச் சம்­ப­வத்தை ஈ.பி.டி.பியி­னரே செய்­த­தா­க­வும், அந்­தத் தாக்­கு­தல் நடை­பெற்­ற­போது நேர­டி­யா­கக் கண்­ட­தா­க­வும் சட்­டத்­த­ரணி சுகாஸ் கூறி­னார் என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

ஐக்­கிய நாடு­கள் சபை­யின் அந்த அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டி­ருப்­ப­தா­வது, 2013ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் 19ஆம் திகதி மாலை­யி­லும், செப்­ரெம்­பர் 20ஆம் திகதி அதி­கா­லை­யி­லும் மாகா­ண­ச­பைத் தேர்­த­லுக்கு முதல்­நாள் அடை­யா­ளம் காணப்­பட்ட ஈழ­மக்­கள் ஜன­நா­ய­கக் கட்சி உறுப்­பி­னர்­கள் ஏனைய இரா­ணு­வச் சீருடை அணிந்­தி­ருந்த நபர்­க­ளு­டன் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பில் போட்­டி­யிட்ட திரு­மதி அனந்தி சசி­த­ர­னு­டைய இல்­லத்­தைத் தாக்­கி­னார்­கள்.

தக­வல்­க­ளின் படி, வன்­மு­றை­யா­ளர்­கள் வீட்­டி­னுள் புகுந்து தனி­யு­ட­மை­களை அழித்­த­து­டன், 8 நபர்­க­ளுக்­கும் காயம் விளை­வித்­துள்­ள­னர்.

காய­ம­டைந்­த­வர்­க­ளில் ஒரு­வ­ரான சுதந்­தி­ர­மான, நியா­ய­மான தேர்­த­லுக்­கான மக்­கள் நட­வ­டிக்கை அமைப்­பின் சட்ட ஆலோ­ச­கர் கே.சுகாஸ் என்­ப­வர், தாக்­கு­த­லில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு தான் யார் என்­பதை தன்­னைத் தாக்­கு­வ­தற்கு முன்­னர் கூறி­யி­ருந்­தார்.

இதன் ஊடாக ஈ.பி.டி.பி. மீது அன்று சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டும் உண்­மைக்­குப் புறம்­பா­னது என்­பதை காலம் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. இது­போன்று கடந்த காலத்­தில் ஈ.பி.டி.பி. மீது பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­க­ளும், அவ­தூ­று­க­ளும் சுமத்­தி­ய­வர்­க­ளின் பொய் முகங்­கள் தற்­போது அம்­ப­ல­மாகி வரு­கின்­றது.

உள்­நோக்­கத்­து­ட­னும், அர­சி­யல் காழ்ப்­பு­ணர்ச்­சி­யு­ட­னும், சம்­பங்­களை திசை திருப்­பும் நோக்­கத்­து­ட­னும் உண்­மைக்­குப் புறம்­பான தக­வல்­களை வழங்கி பிழைப்பு நடத்­தி­ய­வர்­க­ளின் கதை­களை பன்­னாட்டு முக­வர்­க­ளும் ஆரா­ய­மல் விழுங்­கிக் கொண்­டுள்­ளார்­கள் என்­ப­தும் தெரி­ய­வ­ரு­கின்­றது.

எம்­மீது சுமத்­தப்­பட்ட பல குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பான விசா­ர­ணை­க­ளைத் தொடர்ந்து உண்­மை­யான குற்­ற­வா­ளி­கள் யார்? என்­பது அடை­யா­ளம் காணப்­பட்டு உண்மை வெளி­வ­ரு­கின்ற நிலை­யில் ஈ.பி.டி.பியி­ன­ரா­கிய நாம் நிர­ப­ரா­தி­கள் என்­ப­தை­யும், எம்­மீது அவ­தூ­று­கள் வலிந்து சுமத்­தப்­பட்­டுள்­ளது என்­பதை வர­லாறு வெளிச்­சத்­துக்கு கொண்­டு­வந்து எம்­மீ­தான களங்­கத்தை துடைத்­துள்­ளது – என்­றுள்­ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × four =

*