;
Athirady Tamil News

பாடசாலை மாணவர்களுக்கு இலவச பேரூந்து சேவை கோரி மலைப்பயணம்…!! (படங்கள்)

0

இலங்கையில் பாடசாலை சீருடை தரித்த அனைத்து மாணவர்களுக்கும் இலவச போக்குவரத்து சேவையினை வழங்க வேண்டும் என கோரி வவுனியாவில் இருந்து இரு இளைஞர்கள் கடந்த 03.03.2018 அன்று பீதுறுதாலகால மலை நோக்கி மோட்டார் சைக்கிள் பயணத்தினை மேற்கொண்டிருந்தனர்.

வவுனியா இளைஞர்களான த. பிரதாபன் மற்றும் ம. இமையவன் ஆகிய இரு இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்ட இவ் சாதனைப்பயணம் இன்று வவுனியா வைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் முடிவடைந்துடன் இருவருக்கும் பொண்ணாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் 656 கிலோ மீற்றர் தூரம் சென்று பீதுறுதாலகால மலையில் கொடியொன்றினை நாட்டி மாணவர்களுக்கான இலவச பேரூந்து சேவையினை இலங்கை அரசு ஏற்பாடு செய்து வறிய மாணவர்களின் கற்றலுக்கு மேலும் ஊக்குவிப்பு வழங்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து இடம்பெற்ற இப் பயணத்தின் முடிவில் வவுனியா மாவட்ட செயலாளர் சோமரத்தின விதான பத்திரனவிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − ten =

*