;
Athirady Tamil News

ஆறாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு…!!

0

இலங்கையின் அரச முகாமைத்துவ சேவைக்கு ஆட்சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சை இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.

கடந்த வருடம் இடம்பெற்ற பரீட்சையில் சித்தியெய்தியவர்களுக்கான நேர்முகப் பரீட்சையே இவ்வாறு ஆரம்பமாகியுள்ளது.

இம்முறை ஆறாயிரம் பேர் அரச முகாமைத்துவ சேவையில் இணைத்துக் கொள்ளப்பட இருப்பதாக அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கான நேர்முகப் பரீட்சை இன்று ஆரம்பமாகியுள்ளது.

போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு நேர்முகப்பரீட்சைக்கான கடிதங்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நேர்முகப் பரீட்சை, அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சில் இன்று முதல் எதிர்வரும் 13ஆம் திகதி வரை நடைபெறும் என்று அரச இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் கே.வி.பி.எம்.ஜி.கமகே தெரிவித்தார்.

இதேவேளை நேர்முகப் பரீட்சையின் பின்னர் இவர்கள் சேவையில் துரிதமாக இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − 15 =

*