;
Athirady Tamil News

உ.பி.யில் பயங்கரம்- பட்டப்பகலில் காங்கிரஸ் தலைவர் சுட்டுக்கொலை..!!

0

உத்தரப்பிரதேசம் மாநிலம் பக்பத் மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பெண் தலைவர் முன்னி பேகம் இன்று பட்டப்பகலில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் அம்மாவட்டத்தின் கோட்வாலி பகுதியில் உள்ள முன்னி பேகத்தின் வீட்டில் நடந்துள்ளது. பேகத்தை சுட்டு கொன்ற கொலையாளி சம்பவ இடத்திலிருந்து தப்பிச்சென்று விட்டார். முன்னி பேகத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை முன் விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என கூறுகின்றனர். காங்கிரஸ் தலைவர் முன்னி பேகம் சென்ற ஆண்டு நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × three =

*