;
Athirady Tamil News

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு – இந்திராணி முகர்ஜியின் சி.பி.ஐ. காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு..!!

0

மும்பையில் உள்ள ஐ.என். எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீடு பெற்றுத்தர தடையில்லா சான்றிதழ் கொடுத்த விவகாரத்தில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தலையிட்டு முறைகேடு செய்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் இயக்குனர் இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம் அமைந்து இருந்தது.

அவர் கார்த்தி சிதம்பரத்துக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாக கூறியிருந்தார். எனவே, இவ்வழக்கில் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தையும், இந்திராணி முகர்ஜியையும் நேருக்குநேர் அமர வைத்து விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதற்காக கார்த்தி சிதம்பரத்தை அவர்கள் நேற்று மும்பை அழைத்து சென்றனர். மும்பை பைகுல்லா சிறையில் நேற்று பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை இந்திராணி முகர்ஜியும், கார்த்தி சிதம்பரமும் நேருக்கு நேர் அமர வைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இருவரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் மாறிமாறி கேள்விகள் கேட்டனர்.

குறிப்பாக அன்னிய முதலீடு அளவுக்கு அதிகமாக பெறப்பட்டது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் கார்த்தி சிதம்பரத்துக்கு கை மாறிய பணம் எவ்வளவு என்றும் விசாரணை நடந்தது.

இந்த விசாரணையின் போது கார்த்தி சிதம்பரத்துக்கு லஞ்சம் கொடுத்ததை இந்திராணி முகர்ஜி மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தியதாக தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், இவ்வழக்கில் இந்திராணிக்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில்
மும்பை பைகுல்லா சிறையில் இருந்தவாறு டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்திராணி முகர்ஜியின் காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டிப்பு செய்து சி.பி.ஐ. கோர்ட் சிறப்பு நீதிபதி உத்தரவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 4 =

*