;
Athirady Tamil News

திருச்சி அருகே வயலில் காவல் பணியில் ஈடுபட்ட விவசாயி படுகொலை..!!

0

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பெருவளநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் தேக்கையா (வயது 35). இவரது மனைவி எஸ்தர்மேரி. இவர்களுக்கு 2குழந்தைகள் உள்ளனர். விவசாயியான தேக்கையா நேற்று காலை அப்பகுதியில் உள்ள அவரது மாமனாருக்கு சொந்தமான வயலில் நெல் அறுவடை பணியில் ஈடுபட்டார். பின்னர் வீடு திரும்பிய அவர், இரவு வயலில் குவித்து வைக்கப்பட்டிருந்த நெல்லை யாரும் திருடி செல்லாமல் இருப்பதற்காக காவல் பணிக்கு சென்றார்.

இந்நிலையில் இன்று காலை அப்பகுதி விவசாயிகள் வயலுக்கு சென்ற போது, தேக்கையா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த விவசாயிகள் மற்றும் பொது மக்கள் அதிர்ச்சியடைந்ததோடு, இது குறித்து உடனடியாக லால்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சப்- இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தேக்கையாவை மர்மநபர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. ஆனால் எதற்காக கொலை செய்தனர் என்று தெரியவில்லை.

வயல் பிரச்சனையில் இந்த சம்பவம் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + 16 =

*