;
Athirady Tamil News

தாஜ்மகால் நுழைவு டிக்கெட் இனி சூரிய உதயத்துக்கு முன்பே கிடைக்கும்..!!

0

உலக அதிசயங்களில் ஒன்றாகவும் காதல் சின்னமாகவும் விளங்கும் தாஜ்மகால் ஆக்ரா நகரின் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. மொகலாயர் காலத்து கட்டுமானங்களுடன், பிரமிக்க வைக்கும் அழகில் இருப்பதால், உள்நாடுகளில் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்தும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர்.

தாஜ்மாஹாலை சுற்றிப்பார்க்க உள்நாட்டவர்களுக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இது மூன்று மணி நேரத்திற்கு மட்டுமே. இதற்கென வெவ்வேறு நிறங்களில் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. தற்போது வரை உள்பகுதியில் உள்ள மும்தாஜ் கல்லைறைக்கு சென்று பார்வையிட கட்டணம் ஏதும் கிடையாது.

கடந்த மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில் வரும் ஏப்ரல் மாதம் முதல் வெளியே சுற்றிப்பார்க்க மூன்று மணி நேரத்திற்கு ரூ.50 எனவும், உள்பகுதிக்கு சென்று பார்க்க கூடுதலாக 200 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தாஜ்மகாலை சுற்றிப்பார்ப்பதற்கான நுழைவு டிக்கெட் வழங்கும் நேரம் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மாற்றப்பட்டுள்ளது. டிக்கெட் வழங்கும் பணி காலை சூரிய உதயத்திற்கு 45 நிமிடத்திற்கு முன் தொடங்கப்படும். சூரியன் மறைவிற்கு 30 நிமிடத்திற்கு முன் டிக்கெட் வழங்கும் பணி நிறுத்தப்படும் என மக்களவையில் இன்று கலாச்சாரத்துறை இணை மந்திரி மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × five =

*