;
Athirady Tamil News

பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு…!!

0

பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வழங்கி வைத்தார்.

வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அவர்களின் 2017ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் இருந்து பாடசாலை மாணவர்களுக்கான துவிச்சக்கரவண்டிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று 05.03.2018 கோப்பாய் பிரதேச செயலகத்தில் காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

கோப்பாய் பிரதேசசெயலகப்பகுதிக்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான துவிச்சக்கரவண்டிகளே இன்று மாணவர்களிடம் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், கோப்பாய் பிரதேச செயலர் திருமதி,சுபாஜினி மதியழகன், கோப்பாய் பிரதேசசபை உறுப்பினர் சி.அகீபன் மற்றும் பயனாளிகளான மாணவர்கள், பெற்றோர், அலுவலக உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 − 2 =

*