;
Athirady Tamil News

ராஜபக்ச அரசியல் எழுச்சியை விரும்பாத உறுப்பினர்கள், ஆனால் கருத்துக்கூற மறுப்பு…!!

0

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், பிரேரணைக்கு ஆதரவு வழங்குவது தெடர்பாக கட்சிகளிடையே வெவ்வேறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து விலக்கினால், மஹிந்த ராஜபக்ச அல்லது அவருக்கு நெருக்கமான ஒருவர் பிரதமர் பதவியை ஏற்க நேரிடும்.

அவ்வாறான ஒருவர் பிரதமர் பதவியை ஏற்றால், அனைத்துக் கட்சிகளும் பாரிய அரசியல் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என உறுப்பினர்கள் சிலர் கருதுகின்றனர், அச்சமடைகின்றனர்.

குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்களிடையே இவ்வாறான சிந்தனைகள் இருப்பதாகவும், அதனால் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்க முடியதென கூறியதாகவும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜே.வி.பி மற்றும் மஹிந்த ராஜபக்சவை மையமாகக் கொண்ட கூட்டு எதிர்க்கட்சியில் உள்ள உறுப்பினர்கள் கூட அவ்வாறு யோசிப்பதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

மஹிந்த ராஜபக்சவை அல்லது அவருக்கு ஆதரவான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவரை பிரதமராக்கினால் மீண்டும் 2015ஆம் ஆண்டுக்கு முந்திய அரசியல் நிலைமை உருவாகும் என கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட சிந்திப்பதாகவும் செய்தியாளர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் பலர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக பேசினாலும், மனதளவில் 2020ஆம் ஆண்டுவரை பிரதமர் பதவியில் ரணில் விக்கிரமசிங்க பதவி வகிப்பதையே விரும்புவதாகவும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படும்போது உறுப்பினர்கள் பலர் வாக்களிப்பில் கலந்துகொள்ளாது சபையை விட்டு வெளியேறுவார்கள் எனவும் கூறப்படுகின்றது.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, ராஜபக்ச அரசியல் எழுச்சிக்கு வலுச்சேர்க்கும் என உறுப்பினர்கள் பலர் அச்சமடைந்துள்ளனர்.

அதேவேளை கட்சிக்குள் ஏற்பட்டுள்ள தலைமை பிரச்சினையால் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சிலர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு வழங்கவுள்ள ஆதரவு ஆபத்தானது எனவும் உறுப்பினர்கள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால் யாரும் எதையுமே வெளிப்படையாகக் கூற முடியாத அச்சமானதொரு சூழலில் இருப்பதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன என்று செய்தியாளர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாகவும் செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − three =

*