;
Athirady Tamil News

டாக்டர்களால் இறந்ததாக கூறப்பட்டவர் பிரேத பரிசோதனையின் போது உயிர் பிழைத்த அதிசயம்..!!

0

மத்தியப்பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஹிமான்ஷு பரத்வாஜ் (24). இவர் நேற்று தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது வாகனத்தில் இருந்து தவறி விழுந்ததில் விபத்து ஏற்பட்டது.

இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கிருந்த மருத்துவர்கள் அவரது உயிரை காப்பாற்ற முடியாது என கூறி நாக்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர். அதையடுத்து அவரை நாக்பூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு ஹிமான்ஸா பரத்வாஜ் மூளை சாவு அடைந்ததாகவும். அவரது இதயம் மட்டும் துடிப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால், சிறிது நேரத்தில் இதய துடிப்பும் நின்றுவிட்டதாக கூறி அவரது உடலை பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், பிரேதபரிசோதனைகளுக்கான ஏற்பாடு செய்யப்பட்டபோது அவரது இதயம் துடிப்பதும், மூளை செயல்படுவதும் தெரியவந்துள்ளது. மருத்துவர்களின் தவறான புரிதலால் அந்த நபர் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவத்திற்கு அவரது உறவினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் அவரது உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × three =

*