;
Athirady Tamil News

தேயிலை கொய்யும் தொழிலாளா்கள் மீது குளவி தாக்குதல்: 10 பேர் பாதிப்பு…!! (படங்கள்)

0

லிந்துலை பெயார்வெல், அகரகந்தை, தங்ககலை ஆகிய தோட்டங்களில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது குளவி கொட்டியதில் 10 போ் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனா்.

வெவ்வேறு இடங்களில் தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களையே குளவிகள் கொட்டியதினால் 10 பேர் லிந்துலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் இன்று(05.03.2018) மதியம் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் 2 பேர் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளதாகவும், 8 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இதேவேளை இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 5 ஆண்களும், 5 பெண்களும் அடங்குவதாகவும் தெரியவந்துள்ளது.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − 7 =

*