;
Athirady Tamil News

மின்சாரக் கம்பத்தில் திருத்தப்பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் மின்சாரம் தாக்கி பலி…!! (படங்கள்)

0

காலி, ரத்­கம, சிறி­கந்­து­ர­வத்த பிர­தே­சத்தில் மின்­சார கம்பம் ஒன்றில் திருத்­தப்­ப­ணியில் ஈடு­பட்­டி­ருந்த மின்­சார சபை ஊழியர் மின்­சாரம் தாக்கி உயி­ரி­ழந்­தமை தொடர்பில் அமைச்சு மட்­டத்தில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ள­தாக மின்­சக்தி மற்றும் புதுப்­பிக்­கத்­தக்க சக்­தி­வலு அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

கடந்த 2 ஆம் திகதி சிறி­கந்­து­ர­வத்த பிர­தே­சத்­தி­லுள்ள அதி­சக்­தி­வாய்ந்த மின்­கம்­ப­மொன்றில் ஏறி மின்­கம்­பி­களில் திருத்த வேலை­களை மேற்­கொண்­டி­ருந்­த­போது, மின்­சாரம் தாக்­கி­யதில் மின்­தொ­ழில்­நுட்ப ஊழியர் ஒருவர் மின்­கம்­பத்தில் சிக்­கி­ய­வாறு உயி­ரி­ழந்­தி­ருந்தார்.

இது தொடர்பில் கோண­பி­னு­வல உப மின்­நி­லை­யத்தின் அதி­கா­ரிகள் இரு­வரும் ஊழியர் ஒரு­வரும் பொலி­ஸாரால் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இச்­சம்­ப­வத்தில், ஒப்­பந்த அடிப்­ப­டையில் இலங்கை மின்­சார சபையில் கட­மை­யாற்­றிய 39 வய­தான மின்­சார தொழில்­நுட்ப ஊழியர் ஒரு­வரே உயி­ரி­ழந்­துள்ளார்.

திருத்த வேலை­க­ளுக்­காக துண்­டிக்­கப்­பட்­டி­ருந்த குறித்த மின்­கம்­பத்தின் ஊடாக மின்­சாரம் எதிர்­பா­ராத வித­மாக மீண்டும் செயற்­ப­டுத்­தப்­பட்­டதில் இந்த மரணம் ஏற்­பட்­டுள்­ள­தாக விசா­ர­ணை­களில் தெரிய­வந்­துள்­ளது.

சம்­ப­வத்­தை­ய­டுத்து, சிறி­கந்­து­ர­வத்த பிர­தே­ச­வா­சிகள் மற்றும் மின்­சா­ர­சபை ஊழி­யர்களுக்குமி­டையில் முறுகல் நிலை ஏற்­பட்­டி­ருந்­த­துடன், மின்­சா­ர­சபை ஊழி­யர்­களின் கவ­னயீனத்­தினால் குறித்த ஊழியர் உயி­ரி­ழந்­த­தாக பிர­தே­ச­வா­சிகள் குற்­றஞ்­சாட்­டி­யி­ருந்­தனர்.

இந்த ஊழியர் திருத்தப் பணியில் இருக்­கும்­போது, மின்­சாரம் செயற்­ப­டுத்­தப்­பட்­டமை வேண்டுமென்றே மேற்கொள்ள ப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திவலு அமைச்சு உள்ளக விசாரணைகளை முன்னெடுத்துள்ள அதேவேளை, பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 − two =

*