;
Athirady Tamil News

கண்டி சம்பவம் தொடர்பாக மஹிந்தின் கருத்து…!!

0

சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

காலஞ்சென்ற தரணகம குசலதம்மா தேரருக்கு இறுதி அஞ்சலியை செலுத்திய மஹிந்த ராஜபக்ஷ, அதன் பின்னர் கண்டி – திகன சம்பவம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதியும் பிரதமரும் இவ்விடயம் தொடர்பாக கரிசனையுடன் செயற்பட வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்ட மஹிந்த, இவ்விடயத்தில் பொலிஸாரின் செயற்பாடு திருப்திகரமானதாக இல்லையெனக் குறிப்பிட்டார்.

கண்டி தெல்தெனிய பகுதியில் ஏற்பட்ட மோதலில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, திகன மற்றும் தெல்தெனிய பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது.

இதனால், குறித்த பகுதிகளில் பொலிஸாரும், ராணுவத்தினரும், விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + 8 =

*