;
Athirady Tamil News

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் முக்கிய அவதானம்…!!

0

இன்றைய தினம் நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் போது நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் முக்கிய அவதானம் செலுத்தவிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு, தேசிய வர்த்தகத்துறையினரை பலப்படுத்த வேண்டும்.

தேசிய வர்த்தகத்துறையினரை புறக்கணித்துவிட்டு எந்த நாட்டிலும் சிறந்த பொருளாதார நடைமுறைப்படுத்த முடியாது.

அவர்களை விடுத்து வெளிநாடுகளில் இருந்து வருவோர் முதலீடுகளில் ஈடுபடுவது பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.

இந்தவிடயத்தில் முக்கியமான பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ள நிலையில், இன்றைய அமைச்சரவைக் கூட்டத்திலும் தாம் இது குறித்து சில விடயங்களை பேசவிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × five =

*