;
Athirady Tamil News

கண்டி கலவரம்; இளைஞர் ஒருவர் தீயில் வெந்து பரிதாபச் சாவு..!!

0

கண்டியில் நேற்றைய தினம் இடம்பெற்ற வன்முறைகளின்போது முஸ்லிம் இளைஞர் ஒருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் முஸ்லிம்களின் வீடுகள் பள்ளிகள் சிங்கள இளைஞர்களால் தாக்கப்பட்ட நேரத்தில் தனது தாய், தந்தை மற்றும் சகோதரன் ஆகியோரைக் காப்பாற்றி விட்டு வீட்டிற்குள் சிக்கிய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த இளைஞர் காயமடைந்ததனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிர்டுக்கலாம் என்று கருதிய பெற்றோர் வைத்தியசாலைகளில் அவரைத் தேடியுள்ளனர் என்றும், பின்னர் வீட்டினுள் நுளைந்து பார்த்தபோது மகன் தீயில் வெந்து படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் கண்டி, திகன பள்ளிவாசலுக்கு அருகில் வசிக்கும் ஷம்சுதீன் என்பவரின் மகன் எனக் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றைய சம்பவம் குறித்து ஆங்காங்கே நடந்த கலவரங்கள் தற்பொழுது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினருடன் மேலதிகமாக இராணுவத்தினரும் கண்டியில் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × five =

*