;
Athirady Tamil News

சுதந்திர கிண்ண தொடரில் இலங்கை இந்தியா இன்று மோதல்…!!

0

இலங்கை நாட்டின் நடைபெற்று முடிந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் முத்தொடர் போட்டியின் முதலாவது போட்டியில் இன்று இலங்கை மற்றும் இந்தியா அணிகள் மோதவுள்ளன.

இலங்கை நாட்டின் நடைபெற்று முடிந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா, இலங்கை மற்றத் பங்களாதேஸ் அணிகள் மோதும் முத்தொடர் போட்டிகளை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதனடிப்படையில் இன்று முதல் 18 ஆம் திகதி வரை கொழும்பில் இப் போட்டிகள் நடைபெறவுள்ளது.

இன்று ஆரம்பமாகும் முதலாவது போட்டியில் இலங்கை மற்றும் இந்தியா அணிகள் மோதவுள்ளன. இதனடிப்படையில் முதலாவது போட்டி கொழும்பு பிரேமதாஸ மைதானத்தில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. மேலும் அணிகள் பெறும் வெற்றிகளின் அடிப்படையில் இறுதி போட்டி 18 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − 1 =

*