;
Athirady Tamil News

முஸ்லிம் பகுதிகளில் பதற்றம்; கரிப் புகையில் சிக்கியுள்ள வீதிகள்..!! (படங்கள்)

0

இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் முஸ்லிம் மக்களால் பூரண ஹர்த்தால் கடைப்பிடிக்கப்படுவதுடன் வீதிகளின் குறுக்கே ரயர் எரிக்கப்படுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

நாடளாவிய ரீதியில் முஸ்லீம்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் வன்முறைகளை எதிர்த்தும், கடும் கண்டனம் தெரிவித்தும் அம்பாறை மாவட்டத்திலுள்ள அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பாலமுனை, ஒலுவில், கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை மற்றும் முஸ்லிங்கள் வாழும் பல பிரதேசங்களிலும் இந்த எதிர்ப்பு நடவடிக்கை பின்பற்றபட்டு வருகின்றது.

இதன்படி கடைகள் அடைக்கப்பட்டு வீதிகளில் டயர் போட்டு தடையேற்படுத்தி வருவதனை அவதானிக்க முடிவதுடன் மக்கள் மத்தியில் அச்சநிலை மேலோங்கி இருப்பதனையும் காணக்கிடைப்பதாக பிராந்திய செய்தியாளர் கூறுகின்றார்.

இதனால் குறித்த பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள், வங்கிகள், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், கடைகள் போன்றன மூடப்பட்டும், வைத்தியசாலைகள், அரச நிறுவனங்கள் ஸ்தம்பிதம் அடைந்தும் காணப்படுவதாக அவர் மேலும் கூறுகின்றார்.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + 11 =

*