;
Athirady Tamil News

பாடசாலை மாணவியை மோதித்தள்ளிய மோட்டார் சைக்கிள்…!!

0

பாடசாலை மாணவியை மோதித்தள்ளிய மகளிர் கல்லூரி மாணவியின் மோட்டார் சைக்கிள் பொறுப்பற்ற பாடசாலை நிர்வாகம் தொடர்பில் பெற்றோர் விசனம்

வவுனியாவில் உள்ள பிரபல மகளிர் கல்லூரியின் மாணவியை மாணவ தலைவி செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் மோதிய சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் இருந்து பாடசாலை முடிவடைந்து வீடு நோக்கி நடந்து சென்ற 9 ஆம் வகுப்பு மாணவியை அதே பாடசாலையின் மாணவ தலைவியொருவர் வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்து மோதியதில் நடந்துசொன்ற மாணவி கால் முறிந்து படுயாமடைந்துள்ளார்.

குறித்த பாடசாலைக்கு மாணவிகள் மோட்டர்ர் சைக்கிளில் வருவது தொடர்பாக பெற்றோர் பலர் அதிர்ப்தி தெரிவித்து வரும் நிலையில் பாடசாலை நிர்வாகம் அது தொடர்பில் கவனம் செலுத்தாமல் மாணவிகள் பாடசாலைக்கு மோட்டார் சைக்கிளில் வருவதற்கு அனுமதி அளித்து வருகின்றனர்.

இந் நிலையில் நேற்றைய தினம் பாடசாலை முடிவடைந்து மாணவியொருவர் வீடு; நோக்கி சென்றபோது பாடசாலை வளாகத்திற்குள் இருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவ தலைவி வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தியுள்ளார்.

இதன் போது நடந்துசொன்ற மாணவி மீது வேகமாக மோட்டார் சைக்கிள் மோதி இருவரும் கீழே விழுந்த நிலையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய மாணவ தலைவி சுதாகரித்துக்கொண்டு தனது மோட்டார் சைக்கிளை எடுத்து அவ்விடத்தில் இருந்து மீண்டும் வேகமாக தப்பிச்சென்றுள்ளார்.

இந் நிலையில் காயமடைந்த மாணவியை அங்கிருந்தவர்கள் மற்றும் முற்சக்கரவண்டி சாரதியொருவருமாக முதலுதவியளித்தபின்னர் பாடசாலை அதிபரிடம் இது தொடர்பாக முற்சக்கரவண்டி சாரதி முறையிட்டுள்ளார்.

எனினும் குறித்த பாடசாலையின் அதிபர் தமது பாடசாலைக்கு எவரும் மோட்டார் சைக்கிளில் வருவதில்லை என தெரிவித்தாக முற்சக்கரவண்டி சாரதி தெரிவித்தார். எனினும் பாடசாலையில் உள்ள சீசீரிவி கமராவில் பார்க்குமாறு தெரிவித்தபோதிலும் அதற்கு பாடசாலை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந் நிலையில் காயமடைந்த மாணவியின் பெற்றோர் பாடசாலை அதிபரிடம் சென்று முறையிட்ட நிலையில் பெற்றோர் மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுக்கின்றனர். அரசாங்கம் சாரதி அனுதிப்பத்திரம் வழங்குகின்றது நாம் என்ன செய்வது என பொறுப்பற்றவிதத்தில் பதிலளித்ததாக காயமடைந்த மாணவியின் பெற்றொர் தெரிவித்ததுடன் தமது மகள் இரண்டு மாதங்களுக்கு நடக்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந் நிலையில் வவுனியா நகர்ப்பகுதியில் உள்ள பாடசாலைகளுக்கு மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் செல்வது அதிகரித்து வரும் நிலையில் அது தொடர்பாக அதிபர்கள் கவனம் செலுத்தாமல் உள்ளமையானது வறிய மாணவர்களின் மனதளவான தாக்கத்திற்குளாக்குவதாக பெற்றோர் பலரும் கவலை தெரிவிக்கின்றனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + sixteen =

*