;
Athirady Tamil News

ஸ்ரீலங்காவில் வருடாந்தம் 1700 சிசு மரணங்கள் – கர்ப்பினிகள் அவதானம்…!!

0

ஸ்ரீலங்காவில் வருடாந்தம் 1700 சிசு மரணங்கள் சம்பவிப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

தாயின் கருவறையில் சிசு உருவாகி 28 வாரங்கள் பின்னர் இந்த மரணங்கள் சம்பவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு குழந்தை பிறந்து முதல் வாரத்திற்குள் 1550 சிசு மரணங்கள் சம்பவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக பிறவிக் குறைபாடுகள் தினத்தை முன்னிட்டு சுகாதார பணிமனையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தாய் அல்லது தந்தையின் பரம்பரையிலுள்ள குறைபாடுகள் மற்றும் கர்ப்பிணியின் சூழல், தாயிடம் காணப்படும் நோய்கள், மனநிலை மற்றும் பாவிக்கும் மருந்து வகைகள் எனபனவும் சிசு மரணங்களுக்கு பிரதான காரணங்களாகின்றன.

எனினும் 35 சதவீதமான சிசு மரணங்கள் சம்பவிப்பதற்கான காரணங்கள் இதுவரையல் கண்டறியப்படவில்லை எனவும் ஆண்டுக்கு ஒரு இலட்சம் தாய்மாறுக்கிடையில் சிசு மரணம் நிகழ்வதாகவும் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை கருவுற்ற தாய் தனது குழந்தை பிரசவிப்பு தொடர்பாக அக்கரையுடன் இருக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர், பெரும்பாலான தாய்மார் தமது உடல் ஆரோக்கியத்தைப்போன்று உள ஆரோக்கியத்தில் அக்கரைக் கொள்வதில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

சில தாய்மார்கள் மது அருந்தும் பழக்கம் உடையவர்களாயின் பிறக்கும் குழந்தை கண்கள் ஒடுங்கியவாறும் வாயின் மேலுதடு சற்று தூக்கிய நிலையிலும் பிறக்க வாய்ப்புண்டு. இவையும் ஒருவித குறைபாடாகவே கணிக்கப்படுகின்றன.

மேலும் ஒரு குழந்தை பிறந்து சில நாட்களில் இறக்குமாயின் அல்லது ஏதேனும் குறைபாடுகளுடன் பிறந்து இறக்குமாயின், அவ்வாறு இறந்த குழந்தையை கட்டாயம் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்படவேண்டும். மாறாக பொது மக்கள் அதனை விரும்பாமல் மூடநம்பிக்கைளினால் தனது அடுத்த பிரசவத்தையும் முழுமையாக செய்ய முடியாமல் ஆரோக்கியமா குழந்தையை பெற்றெடுக்க தவறுகின்றனர்.

மரபணு பரிசோதனை மூலம் குழந்தை இறப்பதற்கான காரணம் என்ன எனபதை அறிவதோடு அடுத்த குழந்தைக்கும் அதே மாதிரியான பிரச்சனைகள் ஏற்படுமா என்பதற்கான தீர்வினையும் கண்டறிய முடியும்.

ஆகவே குழந்தை பிறப்பு தொடர்பாக தாய் தந்தை விழிப்புடன் இருக்கவேண்டியது அவசியம்.

மேலும் தனது பிரசவம் தொடர்பாக வைத்தியர்களால் முன்வைக்கப்படும் ஆலோசனைகளைக் கேட்டு அவர்களால் பரிந்துரைக்கப்படும் மாத்திரைகளை மாத்திரம் உட்கொள்ள வேண்டும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 + 14 =

*