;
Athirady Tamil News

திடீரென்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள்; காரணம்…!!

0

இலங்கையின் மத்திய மாகாணம் நுவரெலியா மாவட்டத்தின் நோர்வூட் பகுதியில் சில மாணவர்கள் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

நோர்வூட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா நிவ்வெளி பகுதியில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று வந்த ஆறு மணவர்களே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் டிக்கோயா கிழங்கன் மாவட்டவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 09.30 மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிவ்வெளி தொழிநுட்ப பயிற்சிநிலையத்தின் வளாகத்தில் யூரியா உரத்தினை தோட்டமக்கள் கொண்டுவந்து கொட்டியுள்ளதாகவும் இதன் காரணத்தினாலேயே தொழிநுற்ப பயிற்சிநிலையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு அரிப்புத் தன்மை மற்றும் கண்வலி ஆகிய ஒவ்வாமைத் தன்மைகள் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் 12மாணவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற போதும் இதில் ஆறுமாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு ஏனயோர் வெளிநோயளர் பிரிவில் மருந்தினை பெற்று கொண்டு வீடு திரும்பியதாக தொழிற்பயிற்சின் அதிபர் திருமதி சந்ராகுமாரி பெல்ஜிமன் தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் தெரிவித்த அவர்,

”எங்களுடைய தொழிற்பயிற்சி நிலையம் நடாத்திவரும் இடத்தில் பசலை வகைகளை கொண்டு வந்து எங்கள் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு சொந்தமான இடத்தில் எங்களின் அனுமதியை பெறாமல் தோட்ட மக்கள் கொண்டு வந்து கொட்டுகின்றனர்” என்றார்.

இது தொடர்பில் நோர்வூட் தோட்ட உதவி முகாமையாளர் கூறுகையில்,

“தற்பொழு இயங்குகின்ற தொழிற்பயிற்சி நிலையமானது பொகவந்தலாவ தேயிலை பயிர்செய்கை கம்பனிக்கு சொந்தமானது. இந்த கட்டடத்தில் மூன்றாவது மாடி கட்டடத்தினை ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளதுடன் கீழ் மாடியினை தோட்ட நிர்வாக களஞ்சியசாலையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில், பசலை வகைகள் கொண்டு வந்து களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.” என்றார் அவர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + nine =

*