;
Athirady Tamil News

டெல்லியில் இருந்து இஸ்ரேல் செல்லும் ஏர் இந்தியா விமானங்களுக்கு சவுதி அரேபியா அனுமதி..!!

0

இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகருக்கு விரைவில் நேரடி விமானச் சேவையை தொடங்க ஏர் இந்தியா நிறுவனம் தீர்மானித்துள்ளது. வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படும் இந்த விமானம் டெல்லியில் இருந்து டெல் அவிவ் நகரை சென்றடைய சுமார் 8 மணி நேரம் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளையில், சவுதி அரேபியா நாட்டின் வான் எல்லை வழியாக சென்றால் ஐந்தரை மணி நேரத்தில் டெல் அவிவ் போய் சேர்ந்து விடலாம். ஆனால், இஸ்ரேல் நாட்டுக்கு செல்லும் அல்லது சென்று திரும்பும் எந்த விமானமும் தங்கள் நாட்டு வான் எல்லையில் நுழைய கூடாது என சவுதி அரேபியா தடை விதித்துள்ளது.

இந்நிலையில், டெல்லியில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் தங்கள் நாட்டு வான் எல்லையை பயன்படுத்திகொள்ள சவுதி அரேபியா அனுமதி அளித்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அழைப்பை ஏற்று 5 நாள் அரசு முறை பயணமாக வாஷிங்டன் நகருக்கு சென்றுள்ள பெஞ்சமின் நேதன்யாகு, இதுதொடர்பாக சவுதி அரசுடன் ஏர் இந்தியா இன்று ஒப்பந்தம் செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

இதன் மூலம் 8 மணி நேரத்துக்கு பதிலாக ஐந்தரை மணி நேரத்தில் டெல்லியில் இருந்து டெல் அவிவ் சென்றடையலாம். பயணிகளின் பொன்னான நேரத்தில் சுமார் இரண்டரை மணி நேரம் மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 5 =

*