;
Athirady Tamil News

நிரவ்மோடி மோசடி- பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் மேலும் ஒரு அதிகாரி சிக்குகிறார்..!!

0

பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் பிரபல வைரவியாபாரி நிரவ்மோடி ரூ.12 ஆயிரத்து 636 கோடி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். இதுசம்பந்தமாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்க பிரிவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சி.பி.ஐ. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளது. அதன்படி இதுவரை பஞ்சாப் நே‌ஷனல் வங்கி அதிகாரிகள் மற்றும் நிரவ்மோடி நிறுவனத்தின் அதிகாரிகள் என 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் உயர் பதவிகளில் இருப்பவர்கள்.

இந்த நிலையில் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் பொதுமேலாளர் எஸ்.கே. சந்த் சி.பி.ஐ. விசாரணை வளையத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். அவரிடம் தொடர்ந்து சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

2 நாட்களுக்கு முன்பு பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் 2 ஊழியர்கள் மற்றும் நிரவ்மோடி நிறுவனத்தின் ஆடிட்டர், நிரவ்மோடியின் பங்குதாரர் மெகுல்கோக்சியின் நிறுவனமான கீதாஞ்சலி குரூப்பின் டைரக்டர் ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்தது.

அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் எஸ்.கே. சந்திடம் இப்போது விசாரணை நடத்தி வருகிறார்கள். எஸ்.கே. சந்த் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் கருவூலப்பிரிவை கவனிப்பவராக இருந்து வந்தார்.

இந்த வங்கியின் எவ்வளவு பணம் இருப்பு இருக்கிறது. எவ்வளவு பணம் வெளியே செல்கிறது என்று கருவூலத்தில் கணக்கில் வைக்கப்படும். நிரவ்மோடிக்கு பஞ்சாப் நே‌ஷனல் வங்கி உத்தரவாத கடிதம் வழங்கியதன் மூலம் வெளிநாட்டில் உள்ள இந்திய வங்கிகள் அவருக்கு பணம் கொடுத்தன. அதன் அடிப்படையில் இந்த மோசடி நடந்தது.

ஆனால் பஞ்சாப் நே‌ஷனல் வங்கி உத்தரவாதம் கடிதம் கொடுத்ததற்கான எந்த விவரங்களையும் குறிப்பேட்டில் பதிவு செய்யவில்லை. இதை கவனிக்க வேண்டிய பொறுப்பு கருவூலத்திற்கு உள்ளது. இதனால் தான் கருவூலத்தை கவனிக்கும் பொதுமேலாளர் எஸ்.கே. சந்திடம் விசாரித்து வருகிறார்கள்.

கடித பரிமாற்றத்தை பதிவு செய்யாமல் விட்டது சம்பந்தமாக இவருக்கும் அதில் பங்கு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சி.பி.ஐ. விசாரணைக்கு பிறகு அவரும் கைது செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + 6 =

*