;
Athirady Tamil News

ரவீந்திரநாத் தாகூர் கையெழுத்திட்ட புத்தகம் ஏலம்..!!

0

நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியரான ரவீந்திரநாத் தாகூர் எழுதிய புகழ்பெற்ற ராஜா என்ற நாடகக்கதையானது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ‘தி கிங் ஆஃப் தி டார்க் சாம்பர்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தை 1916-ம் ஆண்டு மேக்மிலன் என்ற பதிப்பக நிறுவனம் வெளியிட்டது.

முன்பக்கத்தில் தாகூர் மை பேனாவினால் கையொப்பம் இட்ட புத்தகத்தை வெகுகாலமாக அமெரிக்காவைச் சேர்ந்த புத்தக விற்பனையாளர் பாதுகாத்து வந்தார். அந்த புத்தகம் தற்போது ஏலத்துக்கு வந்துள்ளது. ஆன்லைனில் இதற்காக பதிவு செய்து வருகின்றனர். இந்த புத்தகம் 500 அமெரிக்க டாலருக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏலமானது நாளையுடன் முடிவடைகிறது.

இந்த நாடகத்தில் தாகூர் அக்காலத்தைச் சேர்ந்த மன்னர் மற்றும் அவரது அழகான மனைவியை குறித்து சிறப்பாக எழுதியிருப்பார். இந்த புத்தகம் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − one =

*