;
Athirady Tamil News

காணாமல் போன பெண் தனது சொந்த வீட்டிலேயே எலும்புக்கூடாக கண்டுபிடிக்கப்பட்ட பரிதாபம்..!! (வீடியோ)

0

மூன்றாண்டுகளுக்குமுன் காணாமல் போனதாக கருதப்பட்ட பெண் தனது வீட்டிலேயே இரண்டு சுவர்களுக்குள் சிக்கி எலும்புக்கூடாகக் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் Texas மாகாணத்தைச் சேர்ந்த Mary Stewart Cerruti(61). மூன்றாண்டுகளுக்குமுன் மாயமானார். அவர் எங்கு சென்றார் என்று யாருக்கும் தெரியவில்லை.

அந்த வீட்டிற்கு புதிதாகக் குடிவந்தவர்கள் தற்செயலாக மாடியிருந்து பார்த்தபோது இரண்டு சுவர்களுக்கிடையே சில எலும்புகளும் மண்டை ஓடு ஒன்றும் கிடப்பதைக் கண்டு பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

தடயவியல் ஆய்வில் அந்த எலும்புகள் Mary-யினுடையவைதான் என்று கண்டறியப்பட்டுள்ளது.

மாடியில் ஏறிய அவர் தவறி விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. எலும்புகள் மட்டுமே கிடைத்துள்ளதால் இறப்பிற்கான சரியான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆனால் எலும்புகள் எதுவும் உடையாததால் அவர் தாக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்று பொலிசார் தெரிவித்தனர்.

இறந்துபோன Mary-யின் வீட்டில் ஆறு பூனைகளின் எலும்புக்கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டன. அவை அவரது செல்லப்பிராணிகளாக இருக்கலாம் என்றும் அவர் இறந்து போனதால் உணவளிக்க யாருமின்றி அவை இறந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × one =

*