;
Athirady Tamil News

பிரித்தானியாவில் விபத்தாகி கிடந்த காரின் முன்பு செல்பி எடுத்த பொலிசார்: உள்ளே இருந்த பெண்ணின் நிலை..!!

0

பிரித்தானியாவில் விபத்தாகி கிடந்த காரின் முன்பு இரண்டு பொலிசார் செல்பி எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இது குறித்து மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் Salisbury பகுதியில் கார் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது. இதை அறிந்த பொலிசார் உடனடியாக அங்கு விரைந்து விபத்தில் சிக்கியவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன் பின் விபத்தாகி கிடந்த காரின் முன்பு இரண்டு பொலிசார் செல்பி எடுத்து பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

அதில், ஒரு சில புகைப்படங்களுக்கு வார்த்தைகள் தேவையில்லை, அது போன்று தான் இந்த புகைப்படம் வாகனங்கள் ஓட்டும் போது கவனமாக ஓட்டுங்கள். இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என குறிப்பிட்டிருந்தனர்

இதைக் கண்ட Georgia Oak என்ற பெண், இது என்னுடைய கார் தான் எனவும் அந்த விபத்தில் சிக்கியது நான் தான் எனவும், இந்த புகைப்படத்தைக் கண்டவுடன் என் அம்மா அது என்னுடைய கார் என்பதை அறிந்து கொண்டு, உடனே மருத்துவமனைக்கு வந்துவிட்டார்.

உதவிய பொலிசாருக்கு நன்றி எனவும் மற்றபடி எனக்கு காயங்கள் பெரிதாக இல்லை என குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் இதைக் கண்ட ஒரு சிலரோ இதைப் பற்றி முழு விபரம் தெரியாமல், விபத்து நடந்திருக்கு பொலிசார் விபத்தில் சிக்கியவரை காப்பாற்றாமல் செல்பி எடுத்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளதால், இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் , அந்த விபத்தின் போது காரின் எண் போன்றவைகளை மறைத்து தான் பொலிசார் செல்பி எடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × five =

*