பதற்றத்தைத் தவிர்க்க அமைச்சர்கள் குழு கண்டிக்கு விஜயம்…!!

நாடாளுமன்ற அமர்வுகளைத் தொடர்ந்து, சிரேஷ்ட அமைச்சர்கள் குழுவொன்று கண்டி நோக்கிப் புறப்பட்டுள்ளது. திகன மற்றும் தெல்தெனிய சம்பவங்கள் தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுக்கும் நோக்கில் குறித்த குழு கண்டி நோக்கி விரைந்துள்ளது.
தெல்தெனிய பிரதேசத்தில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் வெடித்துள்ளன.
இது தொடர்பாக இன்று (செவ்வாய் கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்றில் முக்கிய கவனஞ்செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்தே அமைச்சர்கள் மட்டக் குழு கண்டிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.
இதேவேளை தெல்தெனிய சம்பவம் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ கொழும்பில் சிவில் அமைப்புக்களோடு பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.