;
Athirady Tamil News

தொண்டமானால் முன்னெடுக்கப்பட்ட வீதி மறியல் போராட்டம் கைவிடப்பட்டது…!! (படங்கள்)

0

மஸ்கெலியா காவல் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்கவை இடமாற்றம் செய்ய கோரி நகரில் மஸ்கெலியா அப்கட் பிரதான வீதியை மறித்து செய்யப்பட்ட வீதி மறியல் போராட்டம் தற்பொழுது நிறைவுக்கு வந்துள்ளது.

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.காவின் தலைவரும், பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் கலந்து கொண்ட இந்த வீதி மறியல் போராட்டத்தை இ.தொ.காவின் ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்பட்டது.

கட்சி சார்பாக தமது அரசாங்க தொழிலை துஷ்பிரயோகம் செய்வதாக இ.தொ.காவின் ஆதரவாளர்கள் கொடுத்த முறைப்பாட்டுக்கு அமைவாகவே இந்த வீதி மறியல் போராட்டம் இன்று மாலை 6 மணியளவில் சுமார் 2 மணி நேரமாக காவல் நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர காவற்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த போதிலும், அட்டன் காவற்துறை தலைமையகத்திலிருந்து காவற்துறை அத்தியட்சகர் மற்றும் உதவி காவற்துறை அத்தியட்சகர் ஆகியோர் ஸ்தலத்திற்கு விரைந்து ஆறுமுகன் தொண்டமானின் கோரிக்கையை ஏற்று உடனடியாக மேல்மட்ட நடவடிக்கையை மேற்கொள்வதாக கூறிய உத்தரவாதத்திற்கு அமைவாக இந்த வீதி மறியல் போராட்டம் வாபஸ் பெற்று அனைவரும் கலைந்து சென்றனர்.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − 1 =

*