;
Athirady Tamil News

அவசரகாலச் சட்டம் அவசியமில்லை: அநுரகுமார…!!

0

தற்போதைய வன்முறைச் சம்பவங்களுக்கு அவசரகாலச் சட்டம் அவசியமில்லை, நாட்டிலுள்ள சாதாரண சட்டங்களே போதுமானவை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘இன்று நாட்டில் இடம்பெறும் வன்முறைகள் தொடர்பாக அரசாங்கத்தின் மீது சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. இனமுரண்பாடுகள் அரசாங்கத்திற்கு தெரிந்தே இடம்பெற்றிருக்கலாம் எனும் நிலைமை காணப்படுகின்றது.

கண்டியில் நேற்று இடம்பெற்ற வன்முறைகள் திட்டமிட்ட ஒரு சதியாக இருக்கலாம். ஏனெனில் கண்டியில் இடம்பெற்ற சம்பவங்களின் தொடர்ச்சியை அவதானித்தால் இவ்வாறான சந்தேகங்கள் எழுகின்றன’ என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − 15 =

*