;
Athirady Tamil News

வன்முறையாளர்களுக்கு வழங்கும் தண்டனை ஒரு பாடமாக அமையவேண்டும்! – ரிஷாட்…!! (வீடியோ)

0

கண்டியிலும் அம்பாறையிலும் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் தண்டனையானது, இனி நாட்டில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் அமையவேண்டுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரியுள்ளார். அதனைச் செய்யாது அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழக்க வைத்து, தமிழ் இளைஞர்களைப் போல முஸ்லிம் இளைஞர்களையும் ஆயுதம் ஏந்தும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கிவிடக் கூடாதென அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழ்நிலை தொடர்பாக, நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தெல்தெனிய பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்திருந்த போதும், நேற்றைய தினம் எல்லாவற்றையும் மீறி அங்கு வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருந்ததாக ரிஷாட் சுட்டிக்காட்டினார்.

மேலும், தெல்தெனியவில் உயிரிழந்த இளைஞனின் மரணத்திற்கு காரணமாக அமைந்த முஸ்லிம் பெயர்களை தாங்கிய குடிகார இளைஞர்களுக்கு எந்தத் தண்டனை வழங்கினாலும் முஸ்லிம் சமூகம் அதனை பொருட்படுத்தாது. அதேபோன்று, அச்சம்பவத்தைப் பயன்படுத்தி முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்பட்டவர்களை தயவு தாட்சண்யமின்றி சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டுமென ரிஷாட் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, அம்பாறையில் கொத்து ரொட்டியில் மருந்து கலக்கப்பட்டிருந்ததாகக் கூறி வன்முறையின் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டாலும், அவர்களுக்கு பிணை வழங்கி பொலிஸார் பாரபட்சமாக செயற்பட்டதாக ரிஷாட் குற்றஞ்சாட்டினார்.

நாட்டின் இறைமையை பாதுகாப்பதற்கு முஸ்லிம்கள் பெருமளவில் பாடுபட்டதாகக் குறிப்பிட்ட ரிஷாட், இதனைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுனெ கோரிக்கை விடுத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 5 =

*