;
Athirady Tamil News

உசிலம்பட்டி அருகே பஸ் மோதி பிளஸ்-2 மாணவி பலி..!!

0

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள டி.செட்டியபட்டியைச் சேர்ந்தவர் சன்னாசி. இவரது மகள் பெருமாயி. இவர் உசிலம்பட்டியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

நேற்று பொதுத்தேர்வு எழுதிவிட்டு மதியம் அரசு பஸ்சில் பெருமாயி வீட்டுக்கு புறப்பட்டார். தொட்டப்பநாயக்கனூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கிய அவர் அங்கிருந்த ரோட்டை கடக்க முயன்றார்.

அப்போது தேனியில் இருந்து மதுரையை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த தனியார் பஸ் பெருமாயி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்தார். உடனே அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அவரை மீட்டு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு நிலைமை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பெருமாயி பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #Tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + 4 =

*