;
Athirady Tamil News

கர்ப்பிணி தாயாரின் அருகே உயிரிழந்த 3 வயது சிறுவன்: அதிர்ச்சி காரணம்..!!

0

அவுஸ்திரேலியாவில் பவுன்ஸ் பந்து தொண்டையில் சிக்கி 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாகாணத்தில் குறித்த துயர சம்பவம் நடந்துள்ளது. ஆல்பி டேவிஸ் என்ற 3 வயது சிறுவனே பவுன்ஸ் பந்து தொண்டையில் சிக்கியதால் உயிரிழந்தவர்.

சம்பவத்தன்று தனது புதிய மெத்தை மற்றும் போர்வையை காட்டி, அம்மா இரவு எப்போது வரும், நான் சீக்கிரம் தூங்க தூங்க வேண்டும் என தாயாரிடம் கூறியுள்ளான் சிறுவன் ஆல்பி

திங்களன்று மதியம் இவ்வாறு தெரிவித்த சிறுவன், தனது பிறந்த நாள் பரிசாக கிட்டிய பவுன்ஸ் பந்து ஒன்றை வைத்து விளையாடி வந்துள்ளான்.

அந்த பந்தே சிறுவனின் தொண்டையில் சிக்கி உயிரிழக்க காரணமாக அமைந்துள்ளது.

இந்த துயரச் சம்பவத்தை சிறுவன் ஆல்பியின் தாயார் தமது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

இதற்கு பலர் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மட்டுமின்றி பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிறுவனின் 4-வது பிறந்த நாளை முன்னிட்டு அவனுக்கு பரிசாக கிட்டிய பந்தே வினையாகியுள்ளது.

பந்து தொண்டையில் சிக்கியதும் துடித்துப் போன சிறுவனை மீட்க அவனது தாயார் எடுத்த முயற்சிகள் யாவும் தோல்வியில் முடியவே, அவரது கரங்களிலேயே சிறுவனின் உயிர் பிரிந்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four − one =

*