;
Athirady Tamil News

பொலிசாருக்கு அல்வா கொடுத்து ஓடிய திருடன்: ஹீரோவாக மாறி துரத்தி பிடித்த நாயின் வீடியோ

0

அமெரிக்காவில் சந்தேக நபர் ஒருவனை பொலிஸ் நாய் விரட்டி பிடிக்கும் சம்பவம் நடைபெற்றுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அண்டோனியோ படில்லா(37) என்ற நபர் போக்குவரத்து விதியை மீறியது மட்டுமின்றி பொலிசாரை தாக்கியுள்ளான்.

தாக்கிய சம்பவத்தை தொடர்ந்து அந்த நபர் காரை நிறுத்தாமல் சென்றதால் பொலிசார் அவனை விரட்டி பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது

அவனது காரை பொலிசார் விரட்டிச் சென்ற போது, நெருக்கடி மிகுந்த சாலையில் அவன் சாதரணமாக அனைத்து கார்களையும் முந்திய படி சென்றான். இதில் ஒரு கட்டத்தில் கார் ஒன்றின் மீது மோதிய அவன், தொடர்ந்து காரை ஓட்டிச் சென்றான்.

அப்போது சாலையின் முனை ஒன்றில் மாட்டிக் கொண்ட அவன், மற்றொரு காரை திருட முயற்சித்தான். உள்ளே இருந்த பெண் உயிருக்கு பயந்து ஓட, அதைத் தொடர்ந்து அவன் காரை தாறுமாறாக ஓட்டியபடி சென்றான்

இறுதியில் பொலிசார் அவனை சுற்றி வளைத்தவுடன், இறங்கிய ஓடியவனை 8 வயது நெதர்லாந்து ஷெப்பர்ட் நாய் விரட்டிச் சென்று கவ்வி பிடித்தது. இதன் காரணமாக அவன் பற்கள் உடைந்தவுடன், தாடை காயம் ஏற்பட்டுள்ளது.

காயம் ஏற்பட்டவனை கைது செய்த பொலிசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − 1 =

*