;
Athirady Tamil News

இலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை…!!

0

இலங்கையில் தற்பொழுது அமுலாகியுள்ள அவசரகால நிலைமையின் போது சட்டத்தை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக மிகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள அவசரகால நிலை தொடர்பில் பொதுமக்களுக்கு நன்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று இரவு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், நாட்டில் தற்பொழுது தோன்றியுள்ள குழப்ப நிலைகளின் மத்தியில் அரசாங்கம் மீண்டுமொருமுறை அவசரகால நிலைமையை அமுல்ப்படுத்தியுள்ளது. இந்த அவசரகால நிலையின் போது சட்டத்தை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதேவேளை, இலங்கையில் அவசரகாலச் சட்டத்தைப் பொறுத்தவரை பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத் தரபினரால் எந்தவொரு சந்தேக நபரையும் முன் விசாரணையின்றிக் கைது செய்து சிறையில் அடைக்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + 19 =

*