;
Athirady Tamil News

கலவரத்தைத் தூண்டுவோருக்கு இப்படித்தான் செய்யவேண்டும்; மங்கள காட்டம்…!!

0

இலங்கையில் இனங்களுக்கிடையே இடம்பெறும் மோதல் நிலைமைகளைத் தூண்டும் அல்லது உருவாக்கும் நபர்களுக்கு இனிமேல் பிணை வழங்கக்கூடாது என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்வாறான செயற்பாடுகளுக்கு முன்னின்று தலைமை தாங்குவோரின் பிரஜாவுரிமையை இரத்துசெய்யவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கண்டி மாவட்டம் திகன மற்றும் தெல்தெனிய பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறை நிலமை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே, அமைச்சர் மங்கள சமரவீர இந்த விடயத்தை தனது ருவிற்றர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டில் கலவரங்கள் மற்றும் அசம்பாவிதங்கள் இடம்பெறாதவண்ணம் அவசரகால நிலைமை பிரகடனம் செய்யப்பட்டுளமை குறிப்பிடத்தக்கதாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 + ten =

*