;
Athirady Tamil News

தெனியாய செல்வகந்தை பிரதேசத்தில் இடி விழுந்து 8 வீடுகள் சேதம்…!!

0

தெனியாய செல்வகந்தை பிரதேசத்தில் நேற்று(07-03-2018) மாலை ஏற்பட்ட கடும் மழையுடன் கூடிய இடியினால் எட்டு வீடுகளில் உள்ள மின்சார பொருட்கள் சேதமடைந்துள்ளது.

இதில் 6 வீடுகளில் உள்ள தொலைக்காட்சி பெட்டிகள்,வானொலிப்பெட்டிகள்,செடப்,டி.வி.டி பிளேயா் என்பன முற்றாக பழுதடைந்துள்ளது.

மற்றும் ஒரு வீட்டில் ஜன்னலில் உள்ள கண்ணாடி உடைந்துள்ளதோடு இன்னுமொரு வீட்டில் மின்குமிழ்கள் சேதமடைந்துள்ளது.

அத்தோடு பிவுஸ் போர்ட் என்பனவும் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனால் இப்பிரதேச மக்கள் பெரும் கவலை அடைந்துள்ளதோடு இதற்கு அதிகாரிகள் பொறுப்பு கூற வேண்டுமென தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − five =

*