;
Athirady Tamil News

கோடீஸ்வரன் தீக்குளிக்க போவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது…!!

0

சமூகவலையத்தளங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தீக்குளிக்க போவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

அம்பாறை அக்கரைப்பற்றில் தமிழர்கள் மீது தாக்குதல் ஏற்பட்டால் அக்கரைப்பற்று மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்னால் தீக் குளிப்பேன் என நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் ஊடகங்களுக்கு செய்தி வெளியிட்டதாக நேற்று செவ்வாய்க்கிழமை முகநூல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் குறித்த முகநுாலில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் இன்று புதன்கிழமை ஐ.பி சி தமிழ் செய்திகளுக்கு தெரிவித்துள்ளார்.

உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டதாக தெரிவித்த குறித்த முகநூலுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன் இந்த செய்தியானது தனது நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தனது சிறப்புறுமையும் மீறப்பட்டுள்ளதாகவும், குறித்த செய்தி தொடர்பாக ஜனாதிபதி, சபாநாயகர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோரிடம் முறைப்பாடு ஒன்றினையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது ஸ்ரீலங்காவில் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இன முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையிலான செய்திகளை வெளியிடுவது சமூக பொறுப்பற்ற செயலாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான உண்மைக்கு புறப்பான செய்திகளை வெளியிட்ட குறித்த முகநூல் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் மேலும் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + 8 =

*