;
Athirady Tamil News

வவுனியா மதினா நகர் பள்ளிவாசல் முன்பாக விசமிகளால் டயர் எரிப்பு..!! (படங்கள்)

0

வவுனியா மதினா நகர் பள்ளிவாசலுக்கு முன்பாக இனந்தெரியாத நபர்களால் டயர் எரிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று (06) இரவு 11.30 நடைபெற்றுள்ளது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்த பொலிசார் மற்றும் இராணுவத்தினர் மதினா நகர் பள்ளிவாசல் பகுதிக்கு பாதுகாப்பு வழங்கியிருந்தனர். இச்சம்பவத்தால் மதியா நகர் கிராமத்திலும் அதனைச்சூழவுள்ள பகுதியிலும் பதற்ற நிலைமை காணப்பட்டது.

மதினா நகர் பள்ளிவாசலுக்கு இன்று (07) காலை 10.00 மணிக்கு வருகை தந்திருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளர் அப்துல் பாரி மற்றும் கட்சியின் இணைப்பாளர் முத்து முகமட் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ்.திலீபன் ஆகியோர் பள்ளிவாசல் நிர்வாகத்தினரை சந்தித்து நிலமைகளை கேட்டறிந்துகொண்டனர்.

மதினா நகர் பள்ளிவாசல் முன்பாக நடைபெற்ற டயர் எரிப்பு சம்பவம் தொடர்பாக பள்ளிவாசல் மௌழவி எம்.எச்.எஸ்.அலாவுதீன், பிரஜைகள் பொலிஸ் குழு தலைவர் முகமட் பைசல் மற்றும் மதினா நகர் விழையாட்டுக்கழகத்தின் தலைவர் யு.அயுப்கான் ஆகியோர் கருத்து தெரிவிக்கையில்
பள்ளிவாசல் முன்பாக டயர் எரிக்கப்பட்ட நிலைமையானது ஒரு நாசகார செயலாகவே நாங்கள் பார்க்கிறோம். இவ்வாறான வணக்கஸ்தலங்கள் தாக்கப்படுவது இனங்களுக்கிடையிலான முறுகலை ஏற்படுத்தும் நோக்கமாகவே நாங்கள் பார்க்கிறோம்.

இக்கிராமத்தில் யுத்த காலத்தில் கூட இரு இனங்களை சேர்ந்த மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இவ்வாறான வேண்டத்தகாத சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமலிருப்பதை பொலிசார் பாதுகாப்பு வழுங்குவதன் மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 4 =

*