நாளை முதல் மேலதிக வீதி ஒழுங்கு நிரல் நடைமுறையில்..!!

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்து மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்திய ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக நேற்று இரவு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், “காஷ்மீர் எல்லையில் சிரிகோட் என்ற இடத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய ஆளில்லா உளவு விமானம் பறந்தது. அது எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் வந்த போது அதை ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
அதன் நொறுங்கிய பாகங்களை பாகிஸ்தான் ராணுவம் மீட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் 4 உளவு ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.