;
Athirady Tamil News

பெங்களூரில் வீடுகள் தோறும் சூரிய மின்சக்தி அமைப்பு..!!

0

சூரிய ஒளி சக்தியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பில் தற்போது மாநில அரசுகள் கவனம் செலுத்தி வருகின்றன.

சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் உலகிலேயே மிகப்பெரிய அளவிலான சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பு கூடம் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் பெங்களூர் நகரில் பெரும்பாலான வீடுகளில் சூரிய ஒளி மின்சார தகடுகள் அமைத்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், சிறிய வீடுகள் மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள் என அனைத்து கட்டிடங்களிலும் சூரிய ஒளி மின்சார தகடுகள் காணப்படுகிறது. சமீபத்தில் பெங்களூர் மின்சார விநியோக நிறுவனம் சார்பில் அதிகாரிகள் ஹெலிகாப்டரில் பறந்து ஆய்வு செய்தனர். பெங்களூர் நகரை கேமராவில் படம் பிடித்தனர்.

அப்போது பெங்களூர் நகரை பனி மூடியது போல் சூரிய ஒளி தகடுகளால் மூடப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அந்த அளவுக்கு வீடுகள் தோறும் சூரிய ஒளி மின் தகடுகள் அமைக்கப்பட்டு உள்ளது.

வீட்டில் ஒரு முறை சூரியஒளி மின்தகடு பொருத்த மட்டுமே செலவாகும். அதன்பிறகு அதில் இருந்து இலவசமாக மின்சாரம் பெறலாம். சூரிய ஒளி மின்தகடு பொருத்த அரசு மானியமும் வழங்குகிறது.

பெங்களூரில் வரும் 2021-22-ம் ஆண்டில் சூரிய ஒளிமூலம் 1 ஜிகாவாட் (1000 மெகாவாட்) மின்சாரம் தயாரிக்க பெங்களூர் மின்சார உற்பத்தி நிறுவனமான (பெஸ்காம்) இலக்கு நிர்ணயித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + 1 =

*