;
Athirady Tamil News

இரு பிள்ளைகளின் தந்தை கொலை சம்பவம் தொடர்பில் இருவர் கைது..!!

0

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேக்லி தோட்டத்தில் நபர் ஒருவரை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தோட்டத்தைச் சேர்ந்த இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பத்தனை கிரேக்லி தோட்ட தொழிற்சாலையில் உதவி உத்தியோகத்தராக பணி புரியும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 38 வயதான எஸ்.திருச்செல்வம் என்பவர் கொலை செய்யப்பட்டிருந்தார்

நேற்றைய தினம் வேலைக்கு சென்று விட்டு இரவு 9 மணி வரை வீட்டுக்கு வராததால் உறவினர்கள் இவரை தேடி சென்ற போதே இவர் கொலை செய்யப்பட்டிருப்பதனை கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் கொட்டகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியா கைரேகை அடையாளப்பிரிவினர் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதுடன், மோப்ப நாய்களை விட்டு ஆராய்ந்ததோடு, ஹட்டன் நீதவான் மரண விசாரணைகள் மேற்கொண்டுள்ளார்.

இதேவேளை, பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × four =

*