;
Athirady Tamil News

போதை பொருட்களுடன் வருகை தந்த இளைஞர்களுக்கு 129 ஆயிரம் தண்டம்..!!

0

சிவனொளிபாதமலைக்கு கஞ்சா மற்றும் மதனமோதக போதை பொருட்களுடன் வந்த இளைஞர்கள் 60 பேருக்கு 129 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது சிவனொளிபாத மலைக்கு யாத்திரிகர்களின் வருகை அதிகரித்து காணப்படுகின்றது. இதனடிப்படையில் விடுமுறை நாட்களையொட்டி அட்டன் வழியாக சிவனொளிபாதமலைக்கு வந்த யாத்திரிகளை, அட்டன் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே போதை பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.

அட்டன் பொலிஸ் கோரா மோப்பநாயின் உதவியுடன் கைது செய்யப்பட்ட, வெளிமாவட்டத்தை சேர்ந்த மேற்படி சந்தேக நபர்கள் 06.03.2018 அட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே, நீதிமன்ற நீதவான் கே.சரவனராஜா 129 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து விடுதலை செய்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + four =

*