;
Athirady Tamil News

இன வன்முறைகளை கட்டுப்படுத்துமாறு ஐ.நா கோரிக்கை…!!

0

ஸ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ள இன வன்முறைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது.

அத்துடன் வன்முறைச் சம்பவங்களை கண்டிப்பதாகவும் ஸ்ரீலங்காவிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் அறிவித்துள்ளது.

உடனடியாக வன்முறைகளுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், இயல்பு நிலையை கொண்டுவரவும் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்த அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

மேலும் நாட்டில் சட்ட ஒழுங்கை நிலைநிறுத்துமாறும், மனித உரிமைகளையும், எல்லோருக்குமான பாதுகாப்பையும் உறுதி செய்யுமாறும் அதிகாரத்தரப்பினரையும் பொது மக்களையும் கோருவதாக ஸ்ரீலங்காவிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − thirteen =

*