;
Athirady Tamil News

யாழில் பூட்டப்பட்ட மலசல கூடத்தினுள் சிசுவின் உடலம் எப்படி…? (படங்கள்) இதயம் பலவீனமானவர்கள் பார்க்காதீங்க

0

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் இன்று காலை மீட்கப்பட்ட சிசுவின் சடலம் குறித்து பல்வேறுபட்ட சந்தேகங்கள் எழுந்தாலும் அதுகுறித்த விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி பஸ் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள பூட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட பழைய மலசலகூடத்தினுள் இருந்தே குறித்த சிசுவின் சடலம் அழுகி உருக்குலைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

கறுப்பு துணி ஒன்றினால் சுற்றப்பட்ட நிலையில் குறித்த சடலம் காணப்பட்டுள்ளது. சிசு இறந்து சுமார் மூன்று தினங்களுக்கு மேலாக இருக்கலாம் எனத் தெரிவிக்கின்றனர். குறித்த சிசு ஆணா/பெண்ணா என இனங்கான முடியாத அளவிற்கு உருக்குலைந்து காணப்படுகிறது.

இன்று காலை குறித்த மலசலகூடத்திற்குள் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையிலேயே இன்று அதனை நகரசபை ஊழியர்கள் திறந்து பார்த்துள்ளனர். அவ்வாறு பார்த்த போது உருக்குலைந்த நிலையில் சிசு ஒன்றின் சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சாவகச்சேரி பொதுசந்தை வளாகத்தினுள் புதிய மலசலகூடத் தொகுதி அமைக்கப்பட்டு பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டதில் இருந்து இந்த பழைய மலசலகூடம் பாவனைக்கு உட்படுத்தப்படாமல் பூட்டி வைக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

இவ்வாறு பூட்டப்பட்ட (மலசலகூட வெளிக்கதவு) நிலையில் காணப்பட்ட மலசலகூடத்திற்குள் எவ்வாறு சிசிவின் உடலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 2 =

*