;
Athirady Tamil News

பரபரப்பான சூழ்நிலையில் ஜனாதிபதி மைத்திரி கண்டிக்கு விஜயம்…!!

0

பரபரப்பான சூழ்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டிக்கு இன்று புதன்கிழமை மாலை விஜயம் மேற்கொண்டுள்ளார்.

கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் இடம்பெற்றுவரும் வன்முறை சூழ்நிலை தொடர்பில் ஆராய்வதற்காகவே ஜனாதிபதி இந்த அவசர விஜயத்தை மேற்கொண்டிருப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சமய தலைவர்களுடன் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றும் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றுள்ளது.

குறித்த சந்திப்பில் மத தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × one =

*