;
Athirady Tamil News

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருந்து மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் ஆகும் ஜெயா பச்சன்..!!

0

பாராளுமன்ற மாநிலங்களவையில் காலியாகும் 58 இடங்களுக்கு மார்ச் மாதம் 23-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருந்து பாராளுமன்ற மாநிலங்களவைக்கு இரு உறுப்பினர்களை அனுப்பி வைக்கும் தேர்தலில் முன்னாள் முதல் மந்திரி மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிக்கும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சிக்கும் இடையில் கருத்து ஒற்றுமை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருந்து முன்னர் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களாக அனுப்பி வைக்கப்பட்ட பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனின் பதவி ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதியுடன் முடிவடைகிறது.

உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபையில் பா.ஜ.க. அதிக இடங்களை பிடித்துள்ள நிலையில் மேல்சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் சேர்த்து தற்போது சமாஜ்வாதி கட்சியின் வாக்குபலம் 47 ஆக உள்ளது. இங்கிருந்து மாநிலங்களவைக்கு ஒரு உறுப்பினரை தேர்வு செய்து அனுப்ப 37 வாக்குகள் தேவை என்ற நிலையில் இந்த பதவிக்கு தற்போதைய மாநிலங்களவை உறுப்பினர் ஜெயா பச்சனை மீண்டும் வேட்பாளராக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் இன்று அறிவித்துள்ளார்.

மீதியுள்ள பத்து வாக்குகளை மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களுக்கு வழங்க சமாஜ்வாதி கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.

இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 12-ம் தேதியும், பரிசீலனை 13-ம் தேதியும் நடைபெறுகிறது. வேட்பு மனுவை திரும்பப்பெற 15-ம் தேதி கடைசி நாளாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + 7 =

*