;
Athirady Tamil News

சத்தீஸ்கரில் நக்சலைட்களுடன் துப்பாக்கிச் சண்டை – இரு வீரர்கள் வீரமரணம்..!!

0

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. அங்குள்ள காடுகளுக்குள் பதுங்கியிருக்கும் நக்சல்கள் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். அவர்களை பிடிக்கும் முயற்சியில் மாநில போலீசாரும், மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். போலீசார் மற்றும் நக்சல்கள் இடையேயான சண்டையில் இருதரப்பினரும் உயிரிழந்து வருகின்றனர். அதோடு சில சமயங்களில் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்படுகின்றனர்.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் கன்கர் மாவட்டத்தில் உள்ள ராவ்காட் காட்டுப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் ஜிதேந்திர குமார், அம்ரிட் சிங் ஆகிய இரு எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 + 18 =

*