அயர்லாந்தின் வரலாற்றிலேயே அதிரடியான தீர்ப்பு: கருக்கலைப்பு சட்டப்பூர்வமாகுமா?..!!

அயர்லாந்தின் வரலாற்றிலேயே முதன் முறையாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழங்கியுள்ள தீர்ப்பு கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருக்கலைப்பு அயர்லாந்தில் கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது.
அயர்லாந்து அரசியல் சாசனத்தின் எல்லாவது சட்டதிருத்தத்தின்படி கருவிலிருக்கும் குழந்தைக்கும் ஒரு குடிமகனின் அனைத்து உரிமைகளும் உண்டு.
இதன்படி கருக்கலைப்புக்கு தண்டனையாக கடுமையான அபராதமோ அல்லது 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.
இதனால் அயர்லாந்துப் பெண்கள் கருக்கலைப்புக்காக பிரித்தானியாவுக்கு செல்வதுண்டு.சில ஆண்டுகளுக்குமுன் அரசு நைஜீரியாவைச் சேர்ந்த ஒரு மனிதனை நாடு கடத்தப்படும்படி உத்தரவிட்டது.
அந்த மனிதன் கர்ப்பிணியாக இருக்கும் அயர்லாந்துக் குடிமகளான தனது மனைவியைக் காரணம் காட்டி தப்பிக்க எண்ணி, கருவிலிருக்கும் தனது குழந்தைக்கும் எட்டாவது சட்ட திருத்தத்தின்படி சகல உரிமைகளும் உள்ளன என்றும், அது பிறக்கும்போது அதன் தந்தை அதனுடன் இருப்பதற்கும் உரிமை உள்ளது என்றும் வழக்குத் தொடர்ந்தான்.பெரும் பிரச்சினைகளை எழுப்பிய அந்த வழக்கின் முடிவாகத்தான் இப்போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி கருவிலிருக்கும் குழந்தைக்கு வாழ்வதற்கு மட்டும் உரிமை உள்ளது என்றும் அது இன்னும் பிறக்காததால், ஒரு குடிமகனுக்குரிய உரிமைகள் அனைத்தும் அதற்கு இல்லை என்றும் தற்போது வழங்கப்பட்ட தீர்ப்பு தெரிவிக்கிறது.
இந்த தீர்ப்பின்படி சட்டதிருத்தங்கள் கொண்டுவரப்படும்பட்சத்தில் இனி 12 வாரங்களுக்கு குறைவான கருவை கலைப்பது சட்டப்பூர்வமாக்கப்படலாம்