;
Athirady Tamil News

சட்டம் ஒழுங்கு அமைச்சரானார் ரஞ்ஜித் மத்தும பண்டார…!!

0

சட்டம், ஒழுங்கு அமைச்சராக ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினரான ரஞ்ஜித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை முற்பகல் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஏற்பட்ட பின்னடைவை அடுத்து அமைச்சரவையில் மாற்றத்தை கொண்டுவர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தீர்மானித்தனர்.

இதற்கமைய பெப்ரவரி மாதம் கடந்த 25ஆம் திகதி அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்திய ஜனாதிபதி, சட்டம்,ஒழுங்கு அமைச்சை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தற்காலிகமாக ஒப்படைத்தார்.

சட்டம்,ஒழுங்கு அமைச்சை யாருக்கு வழங்கலாம் என்ற இழுபறி நிலை ஏற்பட்ட நிலையில் அதனை பீல்ட் மாரஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கும்படி ஐக்கிய தேசியக் கட்சியினால் ஜனாதிபதியிடம் யோசனை முன்வைக்கப்பட்டது.

எனினும் பீல்ட் மார்ஷல் பொன்சேகாவிடம் அந்த அமைச்சை வழங்கினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அதிரடி நடவடிக்கையை அவர் எடுப்பார் என்றும், அவ்வாறு மேற்கொண்டால் அது எதிர்வரும் தேர்தல்களில் சுதந்திரக் கட்சியின் வெற்றியை பாதிக்கக்கூடும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் சட்டம்,ஒழுங்கு அமைச்சை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்காமல் அதனை ரஞ்ஜித் மத்தும பண்டாரவுக்கு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்ததாக அரச தகவல்கள் மேலும் கூறுகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × five =

*